இந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்தில் கைரி ஜமாலுதீன் இயக்குநர் வாரிய உறுப்பினராக நியமினம்

பெட்டாலிங் ஜெயா, மே 10-

இந்தியாவைத் தளமாக கொண்ட Fischer Medical Ventures LTD எனும் நிறுவனத்தில், இயக்குநர் வாரிய உறுப்பினராக, சுகாதார முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Fischer Chemic LTD என இதற்முன்பு அறியப்பட்ட அந்நிறுவனம், அண்மையில் வெளியிட்டிருந்த அதன் பங்கு சந்தை தொடர்பான அறிவிப்பில், கைரி -யை கூடுதல் இயக்குநராக அறிவித்துள்ளது.

இம்மாதம் 4ஆம் தேதி தொடங்கி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு கைரி அப்பொறுப்பை வகிப்பார் என இரசாயனங்கள் மற்றும் ஆய்வக இயந்திரங்கள் தொடர்பான வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS