விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக இளம் பெண் ஒருவர் குற்றச்சாட்டு

நெகிரி செம்பிலான், மே 10-

விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக இளம் பெண் ஒருவர் கோலா பிலாஹ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

20 வயது தியா கைருன்னிசா முஹம்மது காலித் என்கிற அப்பெண் மாஜிஸ்திரேட் சைபுல் சயோதி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஓர் ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 372B பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மே 3 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் நெகிரி செம்பிலான், கெமாஸ் – சில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS