கோலாலம்பூர், மே 10-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி-யின் பணி ஒப்பந்தக் காலம், வரும் மே 12 ஆம் தேதி முடிவடைகின்ற நிலையில், அவரின் பணி ஒப்பந்தக் காலம், இரண்டாவது முறையாக மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அஸாம் பாக்கியின் பணி ஒப்பந்தக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ முகமது சுக்கியோ அலி இன்று அறிவித்துள்ளார்.
அஸாம் பாக்கி, கடந்த ஆண்டு மே 12 ஆம் தேதி தமது 60 ஆவது வயதில் கட்டாய பணி ஓய்வுப்பெற வேண்டிய நிலையில் அவரின் பணி ஒப்பந்தத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் ஓராண்டுக்கு நீட்டித்தது.
தற்போது இரண்டாவது முறையாக அஸாம் பாக்கியின் ஒப்பந்தக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.