சமூதாய பிரச்னையை அலசிய.. ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்தியா, மே 15-

கலையரசன் – சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் நடிப்பில் வெளியான ஹாட்ஸ்பாட்.. திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திட்டம் இரண்டு, அடியே பட இயக்குனர் விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ஹாட்ஸ்பாட். கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து “ஹாட் ஸ்பாட்” படத்தை தயாரித்திருந்தனர். 

இந்த படத்தை, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு மற்றும்  ஜிவி பிரகாஷ் குமார் நடித்த அடியே ஆகிய வித்தியாசமான வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்  “ஹாட் ஸ்பாட்”  படத்தை கதை,  திரைக்கதை,  வசனம் எழுதி இயக்கி இருந்தார். 

சதீஷ் ரகுநாதன்-  வான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார் முத்தையன் எடிட்டிங் செய்ய, இப்படத்தில் கலையரசன் கதாநாயகனாக ஆட்டோ ஓட்டுநராக  மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக சோபியா நடிக்க,  96 படத்தில் அதிகம் கவனிக்கப்பட்ட கௌரி கிஷன் – ஆதித்தியா ஜோடி மீண்டும் இணைந்து நடித்திருந்தனர்.

மேலும் சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் , திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்த இப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும்… 2 வாரங்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மே 17-ஆம் தேதி, பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வித்தியாசமான புரோமோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS