ஜொகூர் பாரு, மே 23-
போலீசாரின் கண்களை மறைப்பதற்காக பொது இடத்தில் கைவிடப்பட்ட காரை , போதைப்பொருள் பதுக்கி வைக்கும் கிடங்காக பயன்படுத்தி வந்த கடத்தல் கும்பலின் நடவடிக்கையை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
ஜோகூர்பாருவில் மேற்கொள்ளப்பட்ட நான்கு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் இரண்டு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் அந்த கும்பலின் தந்திரம் அம்பலமானது என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் M. குமார் தெரிவித்தார்.
கடந்த மே 16 ஆம் தேதி தொடங்கி, தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 339 வெள்ளி மதிப்புள்ள 13.8 கிலோ எடைகொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.