ஜப்பான், மே 24-
ஜப்பான் நாட்டில் உள்ள கோபி என்கின்ற இடத்தில் தற்பொழுது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகிறது இதில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கம் வென்றுள்ளார்.
ஜப்பான் நாட்டில் உள்ள கோபி என்ற நகரில் தற்பொழுது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதில் ஆடவர் உயரம் தாண்டுதல் T 63 போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கமென்று அசத்தியுள்ளார். கடந்த மே மாதம் 17ம் தேதி துவங்கிய இந்த போட்டிகள், மே மாதம் 25ம் தேதி வரை நடைபெறுகின்றது.
நடப்பு பாரா ஒலிம்பிக் சாம்பியனான சுமித் ஆண்டில் ஆடவருக்கான ஈட்டி ஈடுதல் போட்டியில் தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில், அதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த நமது மாரியப்பன் தங்கவேலு இந்த 2024 ஆம் ஆண்டுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் உயரம் தாண்டுதலில் தங்கம் பதக்கம் வென்றிருக்கிறார்.
ஏற்கனவே ரியோ நாட்டில் நடந்த பாரா ஒலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் பெற்ற மாரியப்பன் தங்கவேலு, இந்த சீசனில் 1.88 மீட்டர் பாய்ந்து தங்கத்தை வென்றிருக்கிறார். இந்நிலையில் பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் மாரியப்பனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா அவர்களும் தனது ட்விட்டர் பக்கம் மூலம் மாரியப்பன் தங்கவேலுவிற்கு வாழ்த்து மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கிழக்கு ஆசியாவில் இந்த பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். பெருந்தொற்று காரணமாக தடைபட்ட போட்டிகள் இப்போது நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.