கோலாலம்பூர், மே 27-
தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF, இம்மாதம் முற்பகுதியில் அகாவுன் ஃப்ளெக்ஸிபெல் எனும் மூன்றாவது கணக்கை அறிமுகப்படுத்தியத்தைத் தொடர்ந்து அந்த மூன்றாவது கணக்கில் தங்கள் சேமிப்பு பணத்தை மாற்றுவதற்கு 28 லட்சத்து 60 ஆயிரம் சந்தாதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அந்த வாரியம் அறிவித்துள்ளது.
EPF சந்தாதாரர்களின் இரண்டாவது கணக்கான அகாவுன் செஜஹ்தேரா எனும் நல்வாழ்வு கணக்கிலிருந்து கடந்த மே 22 ஆம் தேதி வரையில் 878 கோடி வெள்ளி, மூன்றாவது கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்த வாரியத்தின் தொடர்புத்துறை பிரிவு தெரிவித்துள்ளது.
EPF வாரியம், மூன்றாவது கணக்கை அறிமுகப்படுத்தியிருப்பது மூலம் சந்தாதாரர்கள் ஆபத்து, அவசர தேவைகளுக்கு எந்த நேரத்திலும் குறைந்த பட்சம் 50 வெள்ளி முதல் மீட்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.