பினாங்கு, மே 27-
பினாங்கு, சுங்கை பக்கப் சட்டமன்றத் தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதியை நிர்ணயிப்பதற்கு தேர்தல் ஆணையமான SPR, வரும் ஜுன் 6 ஆம் தேதி தனது சிறப்புக்கூட்டத்தை நடத்தவிருகிறது.
கடந்த மே 24 ஆம் தேதி பாஸ் கட்சியைச் சேர்ந்த சுங்கை பக்கப் சட்டமன்ற உறுப்பினர் நோர் ஜம்ரி லத்தீஃப் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படுவதாக SPR இன்று அறிவித்துள்ளது.
அத்தொகுதி காலியாகிவிட்டததை பினாங்கு சட்டமன்ற சபா நாயகர் லாவ் சூ கியாங் கடித வாயிலாக தெரிவித்துள்ளதாகவும் அந்த தேர்தல் ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.