புத்ராஜெயா, மே 27-
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தனது சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் நோட்டீஸ், இப்போதைக்கு வெளியிடப்படவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆ ணையமான SPRM தலைவர்டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் துன் மகாதீர் முகமதுவின் சொத்து விவரங்கள் தொடர்பாக கடந்த மாதம் முதல் அவரை SPRM விசாரணை செய்து வருவதை அஸாம் பாக்கி உறுதிபடுத்தினார்.
ஆனால், துன் மகாதீர் தன் சொந்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்று இதுவரையில் கேட்டுக்கொள்ளப்படவில்லை என்று அஸாம் பாக்கி, இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கினார்.