சிங்கப்பூர் , மே 27-
சிங்கப்பூர் விமானம் நடுவானில் ஆட்டம் கண்ட சம்பவத்தில் காயங்களுக்கு ஆளாகி, தாய்லாந்து தலைநகர் பேங்காக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 மலேசியர்களில் அறுவர் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 7 மலேசியர்கள், பேங்காக் சுக்னாகரின் சமித்வேஜ் ஆகிய மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிக்சைப் பெற்று வருவதாக வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ முகமட் அலாமின் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 27 ஆம் தேதி சிங்கப்பூரின் SQ 321 விமானம் லண்டனிலிருந்து சிங்கப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தபோது மியன்மார் நாட்டின் மிக நீளமான ஆற்றுப் படுகையான இராவதி மீது 36 ஆயிரம் அடி உயரத்தில் கடுமையான காற்று கொந்தளிப்பில் சிக்கி, குலுங்கியதில் 11 ஆயிரம் அடிக்கு திடீரெனத் தாழ்வானது.
இதில் மக்கள் மற்றும் பொருட்கள் கேபினைச் சுற்றித் தூக்கியெறியப்பட்டதில் 53 பேர் காயமுற்றதாக அறிவிக்கப்பட்டது.