ஜொகூர், மே 28-
ஜொகூர், டத்தோ யூனுஸ் சுலைமான் – னில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தை தொடர்ந்து, அதிலிருந்து வெளியேறிய வெடிப்பு சத்தம் லிமா கெடாய் பகுதியில் இருக்கும் குடியிருப்பாளர்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது.
நேற்று இரவு 11 மணியளவில் கிடைக்கப் பெற்ற புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முற்பட்ட வேளை, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையிலிருந்து பயங்கர வெடிப்பு சத்தம் வெளியேறி மேலும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததாக தெரியப்படுகிறது.
செனாய், கூலாய் பெசார் ஆகிய தீயணைப்பு நிலையத்திலிருந்து மொத்தம் 50 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை வந்தடைந்ததாக ஜொகூர், தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் இயக்குநர் சித்தி ரோஹனி நாதிர் தெரிவித்தார்.
இத்தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதுடன் இச்சம்பவம் ஏற்பட்ட காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக சித்தி ரோஹனி நாதிர் மேலும் கூறினார்.