செராஸ், மே 28-
செராஸ், விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் சிட்டி மற்றும் ஜோகூர் தாருல் தக்சிம் (JDT) ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையே நிகழ்ந்த மலேசிய சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தை தொடர்ந்து, அவ்வளாகத்தின் வெளியே நடந்த கலவரத்தை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், இச்சம்பவம் குறித்த இரண்டு காணொளிகள் தற்போது சமூக வளைத்தலங்களில் பரவலாகி வருவது தமது தரப்பின் கவனத்திற்கு வந்ததாக பெட்டாலிங் ஜெயா, மாவட்ட துணை போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் எம். ஹுசின் சொல்லுதீன் சோல்கிப்ளை தெரிவித்தார்.
இக்கலவரத்தினால் விளையாட்டு அரங்கில் உட்காரும் பகுதியின் நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கதவுகள் சேதமடந்திருப்பதாக ஹுசின் சொல்லுதீன் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 427 மற்றும் 233 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக ஹுசின் சொல்லுதீன் மேலும் தகவல் வெளியிட்டார்.