தெரெங்கானு, மே 31-
தெரெங்கானு, செட்டியூ-வில் இரு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில், மோட்டார்சைக்கிளை செலுத்திய 71 வயது முதியவர் பலத்த காயம் காரணமாக உயிரிழந்தார்.
அவருடன் பயணித்த அவரது 14 வயது மகன் சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினார்.
நேற்று மாலை மணி 5.10 அளவில் கம்போங் சாலோக் கெடாய் எனும் இடத்தில், அம்முதியவர் சாலையைக் கடக்க முயன்ற போது, புரோட்டான் சாகா FL வாகனமோட்டி அவரை மோதியதாக, செட்டியூ மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் அசிஸ்டன் சூப்பர்டென்ட் புர்ஹானுதீன் முஸ்தபா தெரிவித்தார்.
அந்த விபத்தில் அம்முதியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், SETIU மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
அதனையடுத்து, அச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக, புர்ஹானுதீன் முஸ்தபா கூறினார்.