பெட்டாலிங் ஜெயா, மே 31-
பள்ளிகளில் ஆசிரியர்கள் நிர்வாக ரீதியிலான பணிகளை அதிகம் மேற்கொள்வதால், வகுப்பறைகளில் மாணவர்களுக்கு கல்வியைப் போதிப்பதற்கு போதிய நேரமில்லாத சூழலை எதிர்நோக்கி வருகின்றனர்.
பல்வேறு ஆவணங்களை தயார் செய்யும்வேலைகளுக்காக அதிக நேரத்தை செலவிடுவதால், பெரும்பாலான ஆசிரியர்கள், அதிகமான வேலை பளுக்களைக் கொண்டிருப்பதாக உணர்கின்றனர்.
அதிலும், சில வேலைகள் ஆசிரியர்களுக்கு தேவையற்றது என MAGPIE எனப்படும் மலாக்காவைச் சேர்ந்த கல்விக்கான பெற்றோர்களின் நடவடிக்கை பணிக்குழுவும் PAGE எனப்படும் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை பணிக்குழுவும் தெரிவித்துள்ளன.
தேவையற்ற நிகழ்ச்சிகள், ஆவணங்கள் தயாரிப்பு, புறப்பாட நடவடிக்கைகள் காரணமாக, ஆசிரியர்கள் அவர்களது அடிப்படை வேலையான மாணவர்களுக்கு கல்வி போதித்தலை நடத்த முடியாமல் தவிக்கின்றனர்.
ஆகையால், நிர்வாக சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உதவியாளர்களை அரசாங்கம் நியமிக்க வேண்டும்.
அப்போதுதான், ஆசிரியர்கள் ஆக்கப்பூர்வமான முறையில் மாணவர்களுக்கு கல்வி போதிக்க முடியும் என அவ்விரு பணிக்குழுவினரும் கூறுகின்றனர்.