இந்தியா, ஜூன் 01-
டி20 உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மும்பை விமான நிலையத்திலிருந்து நியூயார்க் புறப்பட்டுச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டி20 உலகக் கோப்பை தொடரானது நாளை தொடங்குகிறது. ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் கடந்த் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டனர். இதில், ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். இதில், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிஷப் பண்ட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.
மேலும், ரிசர்வ் பிளேயர்ஸாக ரிங்கு சிங், சுப்மன் கில், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா விளையாடும் குரூப் சுற்று போட்டிகள் அமெரிக்காவிலேயே நடத்தப்பட இருக்கிறது.
குரூப் ஏ பிரிவில் சுற்றில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அதன்படி ஒவ்வொரு குரூப்பிலிருந்து மொத்தமாக 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இந்த 8 அணிகளும் 4 அணிகள் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மற்ற 3 அணிகளுடன் ஒரு போட்டியில் விளையாடும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதில், தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர். இதில், ரோகித் சர்மா, ஷிவம் துபே, சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். விராட் கோலி ஆவணங்கள் பிரச்சனை காரணமாக அமெரிக்கா செல்லவில்லை. சில தினங்களுக்கு முன்பு சஞ்சு சாம்சன் அமெரிக்கா சென்றுள்ளார்.
தற்போது இந்திய அணி வீரர்கள் அங்குள்ள தட்ப வெப்ப நிலைக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை நடைபெறும் வார்ம் அப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் தான் விராட் கோலி நேற்று இரவு மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அமெரிக்கா சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.