இந்தியா, ஜூன் 01-
வரும் 2024 ஆம் ஆண்டு மெகா ஏலம் நடக்க உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் 3 முதல் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 2 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியனானது.
இதைத் தொடர்ந்து வரும் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலம் நடைபெறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதற்காக வரும் டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக 10 அணிகளின் உரிமையாளர்களிடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 3 முதல் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
அதே போன்று தான் வரும் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கும் 3 முதல் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு வீரருக்கு ரைட் டூ மேட்ச் கார்டு பயன்படுத்த முடிவு எடுக்கப்படுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தக்க வைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்துவதோடு, ரைட் டூ மேட்ச் கார்டை பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது மெகா ஏலத்திற்கு அவசியமில்லை.
ஐபிஎல் தொடரின் அழகான நோக்கமே ஒவ்வொரு ஆண்டும் ஏலம் நடத்தப்படுவது தான். அதனால், அதனுடைய முக்கியத்துவத்தை குறைக்கும் நோக்கமில்லை. எல்லா சீசன்களிலும் அனைத்து அணிகளாலும் சிறப்பாக செயல்பட முடியாது. இதன் காரணமாக அதிக வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.