SPRM- மிடம் விட்டு விடுவதாக கூறுகிறார் ஹன்னா இயோ

சிலாங்கூர், ஜூன் 01-

சிலாங்கூர் மாநிலத்தில் பொதுப் போக்குவரத்து சேவையை நடத்துவதற்கு சிலாங்கூர் மாநில அரசு, தனது கணவர் ராமச்சந்திரன் முனியாண்டியின் ஆசியா மொபிலிட்டி டெக்னாலஜிஸ் Sdn Bhd நிறுவனத்தை நியமித்துள்ளது தொடர்பான விவகாரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான SPRM-மிடமே தாம் விட்டு விடுவதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.

Selangor demand-responsive transit என்று அழைக்கப்படும் அந்த DRT பொது போக்குவரத்து சேவைக்கு தமது கணவரின் நிறுவனம் நியமிக்கப்பட்டு இருப்பது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேற்கொள்ளும் விசாரணையை வரவேற்பதாக ஹன்னா இயோ குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூரில் பொது போக்குவரத்து சேவைக்கு தனது கணவரின் நிறுவனம், நியமிக்கப்பட்ட விவகாரத்தை SPRM விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது.

இதில் உண்மையே வெல்லும். அது நிரூபிக்கப்படுவதை காண தாம் விரும்புவதாக ஹன்னா இயோ தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் SPRM விசாரணை மேற்கொண்டு வரும் வேளையில் தாம் கருத்து தெரிவிப்பது விசாரணையை பாதிக்கும் என்பதால் இதில் தாம் குறுக்கிடுவதும், கருத்து தெரிவிப்பதும் முறையல்ல என்று ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS