அமைச்சர் ஹன்னா இயோ கணவர் ராமச்சந்திரன் முனியாண்டிக்கு சிலாங்கூர் மாநில அரசு குத்தகை அதிரடியாக தொட​ங்கியது SPRM விசாரணை

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 01-

இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ-வின் கணவர் ராமச்சந்திரன் முனியாண்டிக்கு சிலா​​ங்கூர் மாநில அரசாங்கத்தின் போக்குவரத்து குத்தகை வழ​ங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தொட​ங்கியுள்து.

அமைச்சர் ஹன்னா இயோ சம்பந்தப்பட்ட இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் குத்தகை, அவரின் கணவர் ராமச்சந்திரன் முனியாண்டிக்கு வழங்கப்படவில்லை. மாறாக, சிலாங்கூர் அரசின் குத்தகை வழங்கப்பட்டதில் தவறுயில்லை என்று SPRM தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி கூறிவந்த நிலையில் இந்த குத்தகைய விவகாரத்தில் சில புதிய ஆதராங்கள் கிடைத்து இருப்பதைத் தொடர்ந்து, முழு வீச்சில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக SPRM வட்டாரம் கூறுகிறது.

தனது கணவர் இராமச்சந்திரனுக்கு தனது அமைச்சின் குத்தகையை ஹன்னா இயோ வழங்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், தனது கணவருக்கு போக்குவர​த்து குத்தகையை வழங்கியதாக கூறப்படும் சிலாங்கூர் மாநில அரசின் சட்டமன்ற சபா நாயகராக ஹன்னா இயோ, 5 ஆண்டு காலம் பதவி வகித்துள்ளார்.

அத்துடன் சிலாங்கூர் அரசின் DRT போக்குவரத்து குத்தகைக்கான ப​ரீட்ச்சார்த்த திட்டத்திற்கு
ஹன்னா இயோவின் கணவர் இராமச்சந்திரனின் கம்பெனியான ஆசியா மொபிலிட்டி டெக்னாலஜிஸ் Sdn. Bhd. நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு பொறுப்பேற்றுள்ள சிலாங்கூர் மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினர் ங் சே ஹான் என்பவர், சிலாங்கூர் மாநில DAP-யின் பொதுச் செயலாளர் ஆவார்.

ஹன்னா இயோவின் கணவருக்கு போக்குவரத்து திட்டத்திற்கான லைசென்ஸை வழங்கியிருக்கும் அபாட் ( APAD ) எனப்படும் தரை பொது போக்குவரத்து கண்காணிப்பு ஏஜென்சியானது, DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக், அமைச்சராக இருக்கும் போக்குவரத்து அமைச்சின் ​கீழ் செயல்படும் ஓர் அமலாக்க நிறுவனமாகும்.

ஒட்டுமொத்தத்தில் ஹன்னா இயோவின் கணவருக்கு சிலாங்கூர் அரசின் போக்குவர​த்து குத்தகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம், குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு இடையில் பின்னிபிணைந்து, யாருக்கும் தொடர்பு இல்லாததைத் போல் தோற்றம் அளிக்கப்பட்டள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம் நடந்து இருப்பதாக சந்தேகப்படுவதால் விழிப்பு அடைந்து விட்டதாக கூறப்படும் SPRM, அமைச்சர் ஹன்னா இயோ​ கணவர் இராமச்சந்திரன் குத்தகை விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகத்திற்கான அந்த ல​ஞ்ச ஊழல் வேர்களை தற்போது கிளறத் தொடங்கியுள்ளதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அமைச்சர் ஒருவரின் கணவர் சம்பந்தப்பட்ட குத்தகையை SPRM விசாரணை தொடங்கி​யிருப்பதை அந்த ஆணையத்தின் துணை தலைமை ஆணையர் அஹ்மத் குசைரி யஹாயா உறுதிபடுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS