போதைப்பொருள் கடத்தல், தலைவன் உட்பட 14 கைது

ஜொகூர் பாரு, ஜூன் 01-

ஜோகூர் பாரு மற்றும் இஸ்கண்டார் புத்திரி வட்டாரத்தில் கடந்த புதன்கிழமை போலீசார் தொடங்கிய 7 சோதனை நடவடிக்கைகளில் ஒரு கோடியே 16 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த கடத்தலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக நம்பப்படும் அதன் தலைவன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் இயக்குநர் காவ் கோக் சின் தெரிவித்தார்.

22 க்கும் 52 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஒரு பெண் உட்பட அந்த 14 பேரும் நேற்று பிற்பகல் 3.40 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கைது செய்யப்பட்டதாக இன்று ஜோகூர்பாரு போலீஸ் தலைமையகத்தில் ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் M. குமாருடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் காவ் கோக் சின் இதனை குறிப்பிட்டார்.

இந்த சோதனையின் போது சம்பந்தப்பட்ட கும்பலின் போதைப்பொருள் பதனிடுதல் ஆய்வுக்கூடத்தையும் ஜோகூர் மாநில போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு, கண்டு பிடித்துள்ளது. இச்சோதனை நடவடிக்கைகளில் மொத்தம் 198.54 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவ் கோக் சின் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS