ஜொகூர் பாரு, ஜூன் 01-
டொயோட்டா வெல்ஃபயர் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கால்வாயில் விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் இன்று காலை 7.20 மணியளவில் ஜோகூர்பாரு, சுல்தான் இஸ்கந்தர் நெடுஞ்சாலையில் டங்கா பே அருகில் நிகழ்ந்தது. அந்த சொகுசு வாகனம் கால்வாயில் தலைக்குப்புற விழுந்ததில் ஓர் ஆணும், இரண்டு பெண்களும் நீரில் மூழ்கி மரணம் அடைந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
28 வயது ச்சு வெய் யென், 35 வயது அவ் சியூ செர்ன் மற்றும் 31 வயது சு வான் ரூ ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.