கடந்த இரண்டு வருடங்களில் பதின்ம வயதுடையவர்களுக்கு vape என்கின்ற மின் சிகரெட்டை விற்பனை செய்த குற்றத்திற்காக மொத்தம் 28 நோட்டீஸ்களை மலேசிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, கடந்த ஆண்டு மட்டுமே 26 நோட்டீஸ்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் இவ்வாண்டு இதுவரையில் இரண்டு நோட்டீஸ்கள் வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார்.
13 முதல் 17 வயதுடையவர்களை உள்ளடக்கிய மின் சிகரெட்டின் பயன்பாடு அதிகரித்து வருவதை தேசிய நோயுற்ற சுகாதார ஆய்வு காட்டுகிறது என்பதை அனைத்து தரப்பினரும் அறிந்திட வேண்டும் என்று Dr Dzulkefly வலியுறுத்தினார்.
மின் சிகரெட்டின் பயன்பாடு இளையோர்களிடம் அதிகரித்து வருவதன் முக்கிய காரணம் என்னவென்றால் அதன் தயாரிப்பு தன்மை பெருமளவில் கவரப்படுவதால் மட்டுமே என்று Dr Dzulkefly சுட்டிக் காட்டினார்.
அதுமட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் எந்தவொரு கட்டுப்பாடின்றி அதன் தயாரிப்பின் பரவலான விளம்பரமும் அடங்கும் என்று அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.
இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 852 ஆவது பிரிவிவை அமல்படுத்துவதற்கான உத்தரவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற வேளை, இவ்வாண்டு நடுப்பகுதியில் இது அமலுக்கு வரவிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.