ஜோகூர் மாநிலத்தில் மாநகர் ஒன்றுக்கு பொறுப்பேற்றிருந்த முன்னாள் Dato Bandar ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM – மினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
63 வயதுடைய அந்த முன்னாள் Dato Bandar நேற்று Johor Bahru – வில் உள்ள SPRM அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக SPRM தெரிவித்தது.
அந்த முன்னாள் Dato Bandar மாநகர் ஒன்றுக்கு Dato Bandar – ராக பொறுப்பேற்றிருந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை குத்தகையாளர்களிடம் சில திட்டங்களை அங்கீகரிப்பதற்கு 10 லட்சம் வெள்ளிக்கு மேல் கையூட்டு பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் தொடர்பில் விசாரணைக்கு ஏதுவாக அந்த Dato Bandar கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக Johor, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Datuk Azmi Alias உறுதிப்படுத்தினார்.