வரும் ஜுன் 13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டாளர் விருதளிப்பு விழாவில் நாட்டின் தேசிய ஸ்குவாஷ் வீரர் மற்றும் வீராங்கனையான ஆஃப் ஈன் யோவ்-வும், எஸ். சிவசங்கரியும் அந்த விருதுக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதளிப்பு விழாவில் அவ்விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சுருக்கப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் ஆஃப் ஈன் யோவ்-வும், எஸ். சிவசங்கரியும் அடங்குவர்.
கடந்த 1966 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரும் இவ்விருதானது, உலக விளையாட்டு அரங்கில் மலேசியாவைப் பிரதிநிதித்து இடம் பெற்று, நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ள சிறந்த வீரர் மற்றும் வீரங்கனையை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு இவ்விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.
விளையாட்டாளர்களுக்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுக்கு, இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர்.கே. நகுலேந்திரன் தலைமையிலான சிறப்பு செயற்குழுவினர் தேர்வு செய்கின்றனர் என்று தேசிய விளையாட்டு மன்றத்தின் பொது உறவுப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.