தமது மகன் முகமது பைசல் ஹம்சா ஒரு லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக கூறி, அவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருப்பது தமது நற்பெயரையும், அரசியல் ஆளுமையை சிதைக்கும் முயற்சியாகும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளருமான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமது மகன் என்ற ஒரே காரணத்திற்காக தமது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்த குற்றச்சாட்டு திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஹம்ஸா ஜைனுடின் குறிப்பிட்டுள்ளார்.