கோலாலம்பூர், ஜூன் 06-
கோலாலம்பூர்-ரிலுள்ள தேசிய இருதயக் கழகம் – IJN-ன்னில், பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மெயில், நாளை தொடங்கி, மருத்துவ சிகிச்சையைப் பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் நிர்ணயிக்கின்ற தேதி வரையில், அவருக்கு அங்கு சிகிச்சைத் தொடரப்படும் என மாநில அரசாங்க செயலாளர் சுல்கிஃப்லி யாக்கோப் கூறினார்.
வான் ரொஸ்டி-க்கான சிகிச்சை சீராக நடைபெறவும் அவர் விரைந்து குணமடையவும் அனைத்து தரப்பினரும் இறைவனை பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், சிகிச்சைக் குறித்த மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.