ஜெயின் ராயன் பெற்றோரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படவுள்ளது.

டாமான்சாரா, ஜூன் 06-

ஆட்டிசம் குறைபாடுடைய 6 வயது சிறுவன் ஜெயின் ராயன் அப்துல் மதின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவரது பெற்றோரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படவுள்ளது.

அத்தம்பதியரின் 7 நாள் தடுப்புக்காவல் நாளையுடன் முடிவடையவிருக்கும் சூழலில், அதனை நீட்டிப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதிக் கோரப்படும் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் கூறினார்.

அவ்விருவருவரிடமிருந்து வாக்குமூலத்தைப் பெறும் முயற்சியில், விசாரணை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, சிலாங்கூர், டாமான்சார டாமாய்-லுள்ள அடுக்ககத்திற்கு அருகாமையில் இருந்த கால்வாயில் சிறுவன் ஜெயின் ராயன் சடலமாக மீட்கப்பட்டார்.

அது குறித்து விசாரணையை நடத்திவந்த போலீஸ், கடந்த வெள்ளிக்கிழமை அவரது பெற்றோரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

WATCH OUR LATEST NEWS