நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சரான மூசா முகமது தமது 81 ஆவது வயதில் புற்றுநோயின் காரணமாக நேற்று, சனிக்கிழமை இரவு 7.12 மணியளவில் காலமானார்.
பகான் டத்தோ – வில் பிறந்து வளர்ந்த மூசா முகமது, 1999 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரையில் கல்வி அமைச்சராக பதவி வகித்த முதல் அரசியல்வாதியற்றவர் ஆவார்.
இவர் 1982 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை USM எனப்படும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் vice – chancellor – ராக இருந்தார்.
பின்னர், பல்லூடகத்துறை பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றதுடன் UCSI பல்கலைக்கழகத்தின் கவுன்சிலராகவும் பணியாற்றி வந்தார்.
மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பல்கலைக்கழகத்தின் வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கு மூசா முகமது ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்று USM பல்கலைக்கழகத்தின் மூத்த துணைப் பதிவாளர் முகமது அப்துல்லா கூறினார்.
மூசா முகமது- டின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.