சமூக வலைத்தளம் மட்டுமின்றி பிரச்சாரத்தை விளம்பரப்படுத்தக் கூடிய அனைத்து அணுகுமுறைகளையும் கையாள தயார் – Sanusi பகிரங்கமாக அறிவித்தார்

வருகின்ற ஜுலை 6 ஆம் தேதி சுங்கை பகாப் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு, நடைபெறுகின்ற பிரச்சாரத்தில் சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி பிரச்சாரத்தை விளம்பரப்படுத்த உதவும் அனைத்து அணுகுமுறைகளையும் பெரிக்காத்தான் நேஷனல் கட்சி பயன்படுத்த தயாராக உள்ளது.

சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பெரிக்காத்தான் நேஷனல் தொடர்பான உள்ளடக்கத்தை சில கட்சியினர் தடுக்க தொடங்கியிருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தேர்தலின் இயக்குநர் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி எம்டி நோர் தெரிவித்தார்.

இந்த பிரச்சாரம் முழுவதும் மக்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு தமது கட்சி பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக Muhammad Sanusi அறிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கம் சமூக ஊடகங்களில் எங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை தொடங்கிய போதிலும் அவர்களை எதிர்த்து செயல்பட தயாராக இருப்பதாக Muhammad Sanusi பகிரங்கமாக கூறினார்.

தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமின்றி, வீ‌டு வீடாக சென்று மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கும் தங்களின் கட்சியினர் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆக, சமூக ஊடகங்களில் பிரச்சாரத்தின் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டால் Perikatan Nasional மற்ற புதிய அணுகுமுறைகளை கையாளும் என்று Muhamad Sanusi மேலும் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS