வெ. 560, 284 பறிமுதல், மானிய விலை டீசல் குறித்து 11 வழக்குகள்

கடந்த ஜனவரி முதல் நேற்று வரையில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 284 வெள்ளி 11 காசு மதிப்பிலான டீசல் மோசடி தொடர்புடைய 11 வழக்குகளை Terengganu உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமை‌ச்சக‌ம் பதிவு செய்துள்ளது.

Ops Tiris 3.0 திடீர் சோதனையின் வாயிலாக கோலா திரெங்கானு, பெசுட், கெமாமன் உட்பட டுங்கூன் ஆகிய பகுதிகளில் டீசல் மோசடி சம்பவங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக Terengganu, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சகத்தின் இயக்குநர் சஹாருதீன் முகமது கியா விளக்கினார்.

மேலும், Terengganu முழுவதும் மேற்கொண்ட 905 சோதனைகளில் மொத்தம் எட்டு உள்ளூர் நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக சஹாருதீன் முகமது தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS