போலீஸ் காரை மோதி அடாவடிதனம் புரிந்த மாது கைது செய்யப்பட்டார்

நெகிரி செம்பிலான், குவாலா பிலாஹ், ஜாலான் யாம் துவான் ராடன் – னில் போலீஸ் காரை மோதி அடாவடித்தனம் புரிந்த மாது ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இன்று காலை 9 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 55 வயதுடைய அந்த மாது விபத்து நடந்த இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த Kuala Pilah காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் சாலையில் ஆபத்து விளைவிக்கும் வகையில் Toyota Vios கார் ஒன்று வருவதை கண்டதாக Kuala Pilah மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Amran Mohd Gani தெரிவித்தார்.

சம்பத்தப்பட்ட காரை போலீசார் வழிமறித்து நிறுத்த முயன்ற போது அம்மாது காரை நிறுத்தாமல் சென்றதுடன் அதிகாரிகளின் காரையும் மோதியதாக Amran Mohd கூறினார்.

அதை தொடர்ந்து, அப்பெண் கைது செய்யப்பட்டதுடன் இதுக்கு‌றி‌த்து குற்றவியல் சட்டம் 186 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS