நாளை முதல் டீசலின் விலை லீட்டருக்கு 3.35 வெள்ளி

தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களில் இம்மாற்றம் அமல்படுத்தவுள்ளது

நாளை தொடங்கி தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களில் டீசலின் புதிய விலை லீட்டருக்கு 3.35 வெள்ளி என்று அமல்படுத்தவுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமை‌ச்சக‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

33 வகையான பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும்
டீசலுக்கான உதவித் தொகையை பெறுவதற்கு டீசல் எண்ணெயை பயன்படுத்தும் சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் fleet card – களை பயன்படுத்த வேண்டும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி கூறினார்.

டீசல் நிலையத்திலிருந்து இன்னும் fleet card – டை பெறாத பொது போக்குவரத்து மற்றும் சரக்கு நிறுவனங்கள் நாளை முதல் டீசல் வாங்கும் ரசீதுகளை வைத்திருக்க வேண்டும் என்று ஆர்மிசான் முகமட் வலியுறுத்தினார்.

இது பின்னர் அறிவிக்கப்படும் விண்ணப்ப நடைமுறையின்படி நிதி அமைச்சகத்திற்கு பணத்தை திரும்ப பெறும் உரிமைகோரல்களில் செயல்படுத்துவதாகும் என்றார் ஆர்மிசான் முகமட்.

டீசலுக்கான இலக்குரிய உதவித்தொகையை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளவர்கள் இன்னும் விண்ணப்பிக்காமல் இருந்தால் https://mysubsidi.kpdn.gov.my என்ற இணையத்தளத்தில் உடனடியாக விண்ணப்பம் செய்து கொள்ளும்படி அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS