ஐசிசி விதி மற்றும் நடுவரது தவறான தீர்ப்பால் வங்கதேசம் அதிர்ச்சி தோல்வி!

அமெரிக்கா, ஜூன் 11-

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டிஉலகக் கோப்பை தொடரின் 21ஆவது போட்டியில் வங்கதேச அணியானது ஐபிஎல் விதி மற்றும் நடுவரது தவறான தீர்ப்பால் தோல்வியை தழுவியுள்ளது.

வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 21ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேபட்ன் எய்டன் மார்க்ரம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்தது.

இதில், அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 46 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் 29 ரன்கள் எடுத்தார். குயீண்டன் டி காக் 18 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் தன்ஷிம் ஹாசன் ஷாகிப் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

தஸ்கின் அகமது 2 விக்கெட்டுகளும், ரிஷாத் ஹூசைன் ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய வங்கதேச அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதற்கு ஐசிசி விதிமுறையும், நடுவரது தவறான தீர்ப்பும் காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

போட்டியின் 17ஆவது ஓவரை ஓட்னீல் பார்ட்மேன் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் வங்கதேசம் அணி வீரர் மஹ்மதுல்லா பேடில் பட்டு பந்து பவுண்டரிக்கு சென்றது. பந்து பேடில் பட்டதால் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் நடுவரிடம் அவுட்டிற்கு அப்பீல் செய்தனர். நடுவரும் அவுட் கொடுக்கவே, பின்னர் மஹ்மதுல்லா டிஆர்எஸ் முறைக்கு அப்பீல் செய்தார்.

இதையடுத்து டிவி ரீப்ளேயில் பந்து லெக் ஸ்டெம்பை விட்டு விலகி செல்வது தெளிவாக தெரிந்தது. எனினும், பவுண்டரி கிடைக்கவில்லை. ஐசிசி விதிப்படி டிஆர்எஸ் பரிசோதனையில் நடுவர் அவுட் கொடுத்து மீண்டும் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் அந்த ரன்கள் சேர்க்கப்படாது.

பவுண்டரி மட்டும் கிடைத்திருந்தால் வங்கதேசம் அணி எளிதில் வெற்றி பெற்றிருக்கும். இதன் காரணமாக வங்கதேசம் தோல்வி அடைந்துள்ளது என்று ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS