சுங்கை பூலோ, ஜூன் 12-
குத்ரி நெடுஞ்சாலையில், சூப்பர்மேன் போல் மோட்டார்சைக்கிள்களில் சாகசம் புரிந்த கும்பலை போலீஸ் கையும் களவுமாக பிடித்தது.
இன்று அதிகாலை மணி 2.25 அளவில், OP SAMSENG JALANAN வாயிலாக புக்கிட் அமான் சாலை போக்குவரத்து அமலாக்கம் மற்றும் விசாரணை துறை – JSPT -யை சேர்ந்த உளவு பிரிவு மேற்கொண்ட சோதணையின் போது, அவர்கள் பிடிபட்டனர்.
அவர்களில் ஐவர் பள்ளி மாணவர்களாவர்.
16 முதல் 23 வயதுக்கு உட்பட்ட அவர்கள் அனைவரும் சிலாங்கூர், சுங்கை பூலோ-வில் வசிப்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து, அவர்களிடமிருந்து யமஹா Y15ZR, யமஹா 125Z உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் மேல்கட்ட நடவடிக்கைகளுக்காக பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் கூறியது.