மலாக்காவில் ஃபெல்டா-விற்கு சொந்தமான நில விற்பனை கும்பலிடமிருந்து லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் நிறுவன இயக்குநர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் இடைத் தரகர்கள் என எட்டு பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் வளைத்துப்பிடித்துள்ளது.
மொத்தம் 2 மில்லியன் வெள்ளி சம்பந்தப்பட்ட இந்த லஞ்ச ஊழலில் கோலாலம்பூரைச் சேர்ந்த மூன்று இடைத் தரகர்கள் உட்பட ஐவர் செய்யப்பட்டனர். பிடிபட்டுள்ள எஞ்சிய மூவர், சபாவை தளமாக கொண்ட நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆவர் என்று கூறப்படுகிறது. 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எண்மரும் இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வரும் ஜுன் 17 ஆம் தேதி வரை தடுப்புக்காவல் அனுமதியை எஸ்.பி.ஆர்.எம் பெற்றுள்ளது.