பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12-
மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையில் இன்னும் தீர்க்கப்படாமல், நிலுவையில் இருந்து வரும் இரு தரப்பு விவகாரங்களை தீர்த்துக்கொள்வதற்கு அவ்விரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
தண்ணீர் ஒப்பந்தம், கடல்சார் பகுதிகளில் எல்லை மறு சீரமைப்பு போன்ற நிலுவையில் இருந்து வரும் விவகாரங்களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்- கும் இணக்கம் கண்டனர்.
கடந்த மே 15 ஆம் தேதி சிங்கப்பூரின் பிரதமராக பதவியேற்ற லாரன்ஸ் வோங், தென்கிழக்காசிய நாடுகளின் த லைநகரங்களுக்கு மேற்கொள்ளும் வருகையின் ஒரு பகுதியாக மலேசியா வந்துள்ளார்.
புத்ராஜெயாவில் லாரன்ஸ் வோங்- வுடன் இணைந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், கூட்டாக நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இரண்டு அண்டை நாட்டுத் தலைவர்களும் நிலுவையில் உள்ள விவகாங்களை தீர்த்துக்கொள்வதற்கு உறுதி பூண்டுள்ளனர்.