கோலாலம்பூர், ஜூன் 13-
உதவித்தொகை வழங்கப்பட்ட டீசல் கட்டுப்பாட்டு முறை – SKDS திட்டத்தின் கீழ், பள்ளி மற்றும் விரைவு பேருந்து நடத்துநர்களுக்கு
FLEET அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அந்த அட்டையின் வழி, மாதம் ஒன்றுக்கு ஆயிரத்து 800 லிட்டர் டீசல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, லிட்டருக்கு 1 வெள்ளி 88 காசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் வழங்குகின்ற அந்த உதவித்தொகை, தங்களது சேவைகளுக்கான செலவுகளை ஈடு செய்வதால், பயணிகளுக்கான கட்டணத்தை தங்கள் தரப்பு உயர்த்தவில்லை என அவ்விரு போக்குவரத்து துறைகளைச் சார்ந்த இரு சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஆயினும், வருங்காலங்களில் பேருந்துகளுக்கான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்பட்சத்தில், பயணிகளின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து தங்கள் தரப்பு பரிசீலிக்கும் என மலேசிய பள்ளி பேருந்து நடத்துநர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் அமலி முனிஃப் ரஹ்மத் மற்றும் தீபகற்ப மலேசியாவுக்கான விரைவு பேருந்து நடத்துநர்கள் சங்கத் தலைவர் லைலி இஸ்மாயில் ஆகிய இருவரும் கூறினர்.