IJN-ன்னில் சிகிச்சைப் பெற்றுவரும் வான் ரொஸ்டி-யை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பகாங் சுல்தான்.

கோலாலம்பூர், ஜூன் 13-

தேசிய இருதயக் கழகம் – IJN-ன்னில் சிகிச்சைப் பெற்றுவரும் பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில்-லை, நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார், அம்மாநில சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா.

இம்மாதம் 7ஆம் தேதி இருதய அறுவைச் சிகிச்சையை செய்துக்கொண்ட வான் ரொஸ்டி-யைக் காண, நேற்று மாலை மணி 3 அளவில், IJN-ன்னை வந்தடைந்த பகாங் சுல்தான், சுமார் அரைமணி நேரம் அவரிடம் நலம் விசாரித்ததோடு அளவளாவினார்.

அந்த சந்திப்பின் போது, உடன் இருந்த IJN-னின் இருதய அறுவைச் சிகிச்சை துறை தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் அல்வி முகமது யூனுஸ், வான் ரொஸ்டி-யின் உடல்நிலை குறித்த நிலவரங்களை, பகாங் சுல்தான்-னிடம் பகிர்ந்துக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS