அமெரிக்கா, ஜூன் 13-
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 26ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 26ஆவது போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து 149 ரன்கள் குவித்தது.
பிராண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் 17 ரன்களில் வெளியேற, ரோஸ்டன் சேஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ரோவ்மன் பவல் 1 ரன்னில் வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 6.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் எடுத்து தடுமாறியது. அகீல் ஹூசைன் 15, ஆண்ட்ரே ரஸல் 14, ரொமாரியோ ஷெஃப்பர்ட் 13 ரன்களில் ஆட்டமிழக்கவே வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், கடைசி வரை அதிரடியாக விளையாடிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 30 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இதில், ரூதர்ஃபோர்டு 39 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் நியூசிலாந்து அணியில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டும், டிம் சவுதி, லாக்கி ஃபெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
ஜேம்ஸ் நீஷம் ஒரு விக்கெட் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் 11 ஓவர்கள் வரையில் 6 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு கடைசி 9 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் எடுத்தது. 5 விக்கெட்டுகளை இழந்த போதிலும் வெஸ்ட் இண்டீஸ் அதிகபட்சமாக 149 ரன்கள் குவித்துள்ளது.