பேராக், ஜூன் 25-
பேராக், கெரியான் மாவட்டத்தில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் மாணவி ஒருவர், சில மாணவிகளால் பகடிவதைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாணவி பகடிவதைக்கு ஆளாகும் காட்சியை கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவராக பகிரப்பட்டு வருகிறது. இதில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 13 வயது மாணவி போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் கடந்த ஜுன் 14 ஆம் தேதி பள்ளி கழிப்பறையில் நிகழ்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. படிவம் ஒன்றை சேர்ந்த மாணவி ஒருவரை 15 வயதுடைய இரு மாணவிகள் பகடிவதை செய்வதை அந்த காணொளி சித்தரிப்பதாக முகமட் யூஸ்ரி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.