பினாங்கு , ஜூன் 25-
பினாங்கு , சுங்கை பக்காப் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம் கடந்த சனிக்கிழமை முதல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பக்காத்தான் ஹராப்பானுக்கும், பெரிக்காத்தான் நேஷனலுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ள வேளையில் இதுவரையில் இரு தரப்பிலும் பிரச்சாரம் சுமூகமாக நடைபெற்று வருகிறது.
அரச பரிபாலனம், இனம் மற்றும் மதம் சார்ந்த 3R விவகாரம் தொடர்பில் இரு தரப்பிலிருந்தும் போலீசார் இதுவரையில் எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்று பினாங்கு மாநில போலீஸ் பேச்சாளரான முதில்நிலை உதவி கமிஷனர் W.புஷ்பநாதன் தெரிவித்துள்ளார்.