கோலாலம்பூர், ஜூன் 25-
நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மற்றும் இரண்டு நிர்வாக உயர் அதிகாரிகள் உட்பட எட்டு பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM இன்று கைது செய்துள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் 160 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட இரண்டு பிரதான நெடுஞ்சாலைத் திட்டங்கள் நிர்மாணிப்பு தொடர்பில் லஞ்சம் கேட்டது, லஞ்சம் கொடுத்தது தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி, டத்தோ அந்தஸ்தை கொண்டவர் ஆவார். விசாரணைக்கு ஏதுவாக அந்த மூவரை வரும் வரும் ஜுன் 28 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை SPRM பெற்றுள்ளது.
இதர ஐவர், வரும் ஜுன் 27 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு அனுமதி பெற்றப்பட்டுள்ளதாக SPRM வட்டாரம் தெரிவித்தது.