கோலாலம்பூர், ஜூன் 25-
Daesh தீவிரவாத கும்பல் எந்த வகையான எதிர்ப்பு நடவடிக்கையிலும் போலீஸ் படையை தாக்குவதை முக்கிய இலக்காகவும், சிந்தாந்தமாகவும் கொண்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அம்பலப்படுத்தினார்.
தங்களின் சிந்தாந்தத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அந்த கும்பலை அரச மலேசிய போலீஸ் படை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
போலீஸ் படையினர் மேற்கொண்ட உளவு நடவடிக்கையின் மூலம் அந்த கும்பல் அடையாளம் காணப்பட்டது.
தங்களின் சிந்தாந்தத்தை அவர்கள், அரசாங்க ஆட்சிமுறையின் வாயிலாக கொண்டிருக்கவில்லை. மாறாக, முற்றிலும் மாறுப்பட்டவர்கள்.
இதன் காரணமாகவே உயர் பதவியில் இருக்கும் பிரமுகர்களையும் உயர் போலீஸ் அதிகாரிகளையும் தங்களின் தாக்குதலுக்கான முக்கிய இலக்காக அவர்கள் கொண்டு இருக்கின்றனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சைபுடின் குறிப்பிட்டார்.
Daesh தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் என்று நம்பப்டும் உள்ளூரை சேர்ந்த ஆறு ஆண்கள், இரண்டு பெண்கள் என எட்டு பேர், சொஸ்மா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது மூலம் இந்த கும்பலின் நோக்கம் சிதைக்கப்பட்டுள்ளதாக சைபுடின் தெரிவித்துள்ளார்.