பெர்லின், ஜூன் 2-
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் வலிமையான நெதர்லாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரியா வென்று சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு மேலாக நெதர்லாந்து அணியை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரிய அணி திணறிய நிலையில், புதிய மேனேஜர் ராக்னிக் வழிகாட்டுதலில் சாதனை படைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி எப்படி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியதோ, அதேபோல் யூரோ கால்பந்து தொடரில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 2010ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்தது நெதர்லாந்து. அதன்பின் 2014 ஃபிஃபா உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. அந்த அளவிற்கு வலிமை வாய்ந்த அணியுடன் யூரோ கோப்பை குரூப் சுற்றில் கத்துக்குட்டி அணியான ஆஸ்திரியா மோதியது.
இருப்பினும் குரூப் டி பிரிவில் போலாந்து அணியை தவிர்த்து ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய 3 அணிகளுக்கும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் வாழ்வா, சாவா போட்டியில் நெதர்லாந்து – ஆஸ்திரியா அணிகள் மோதின. இந்த போட்டியின் தொடக்கத்திலேயே நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் டான்யல் மாலன் ஓன் கோல் அடிக்க, ஆஸ்திரியா அணி 1-0 என்ற முன்னிலை பெற்றது. இதன்பின் நெதர்லாந்து அணி வீரர்கள் அட்டாக்கில் ஈடுபட்ட போதும், ஆஸ்திரியா வீரர்கள் சிறப்பாக டிஃபெண்ட் செய்து அசத்தினர்.
இதனால் முதல் பாதி ஆட்டம் முடிவில் ஆஸ்திரியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பின் 2வது பாதி ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே நெதர்லாந்து இளம் வீரர் கோடி காக்போ அந்த அணிக்காக முதல் கோலை அடித்தார். இதற்கு பதிலடியாக 59வது நிமிடத்தில் ஆஸ்திரியா வீரர் ரொமானோ ஷ்மித் 2வது கோலை அடிக்க, தொடர்ந்து 75வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் டிபே 2வது கோலை அடித்து பதிலடி கொடுத்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது.
கடைசியாக 1990ல் நடந்த நட்பு ரீதியிலான போட்டியில் தான் நெதர்லாந்து அணியை ஆஸ்திரியா அணி வீழ்த்தி இருந்தது. கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு பின் நெதர்லாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரியா சாதனை படைத்துள்ளது. இதற்கு ஆஸ்திரியா அணியின் மேனேஜரான ராக்னிக் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இவர் மேனேஜராக வந்தபின் ஆஸ்திரியா அணியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.