சபா, ஜூன் 26-
சபா, மெங்கத்தால்- லில் உயர்நிலை பள்ளி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்ததாக சமூக ஊடகங்களில் வெளியேறியிருந்த காணொளியை குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்று அதிகாலை 6.30 மணியளவில் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதாக கோத்தா கினாபாலு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் காசிம் முடா தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட 15 வயது மாணவன் தாக்கப்பட்டதாகவும் சண்டையில் ஈடுபட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளியில் உண்மையில்லை என்று அந்த ஆசிரியர் கூறியதாக காசிம் முடா கூறினார்.
சமூகத்தினரிடையே பதற்றத்தை விளைவிக்கும் எத்தகைய காணொளிகளையும் அறிக்கைகளையும் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று காசிம் முடா பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.