பகாங், ஜூன் 26-
பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாஹ் அம்மாநிலத்தில் Cytopeutics இயற்கை மையத்தை இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
இத்திறப்பு விழாவில் தெங்கு அம்புவான் பகாங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா, தெங்கு மஹ்கோத்தா பகாங் தேங்கு ஹசனல் இப்ராஹிம் அலாம் ஷாஹ் உட்பட தேங்கு புத்தேரி ராஜா தேங்கு புத்தேரி இலிஷா அமீரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த Cytopeutics இயற்கை மையமானது பொதுமக்களுக்கு, குறிப்பாக மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தங்களின் அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், உயிரித் தொழிநுட்பம் மற்றும் மரபணு சிகிச்சை துறையில் புதுமைகளை ஊக்குவித்து இன்னும் குணப்படுத்த முடியாமல் இருக்கின்ற நோய்களுக்கு புதிய மாற்று சிகிச்சைகளை கண்டுப்பிடிப்பதுதான் Cytopeutics இயற்கை மையத்தின் பிரதான நோக்கமாகும்.
அதுமட்டுமின்றி, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் எந்தவொரு நோயின்றி ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு இது ஒரு சிறந்த முயற்சி என்றார் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன்.