சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னதாக அவ்விருவரும் குற்றச்செயலில் ஈடுபட திட்டம்

பினாங்கு, ஜூன் 26-

பினாங்கு, சுங்கை லொக்கான், ஜாலான் பெர்மாடாங் பாரு -வில் இன்று நள்ளிரவு சந்தேகிக்கும் இரண்டு நபர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னதாக அவர்கள் ஒரு குற்றச்செயலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக போலீசார் நம்புகின்றனர்.

41 க்கும் 51 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவ்விரு நபர்கள் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருந்தது விசாரணையின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு 2.05 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பெரோடுவா மைவி ரக காரில் பயணித்த அவ்விருவரும் பட்டர்வொர்த், சுங்கை டுவா, ஜாலான் பொக்கோக் சேனா-ஜாலான் பெர்மாடாங் பாரு என்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.

அவ்விரு நபர்களும் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்து அவர்களிடமிருந்த தனிப்பட்ட துப்பாக்கியை கொண்டு போலீசாரை சுடுவதற்கு பல தோட்டாக்களை வெளியேற்றியதை தொடர்ந்து, போலீசாரால் அவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹம்சா அகமது கூறினார்.

WATCH OUR LATEST NEWS