கோலாலம்பூர், ஜூன் 27-
யூரோ 2024 காற்பந்து சாம்பியன்ஷிப்பிற்கு ‘bookie’ முகவர்களாக ஈடுபட்ட மூன்று நபர்களை செராஸ், ஜாலான் ஜெஜாகா 7 மற்றும் ஜாலான் லிமா சான் சோவ் லின் ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்தேகிக்கும் 34 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்களின் கைத்தொலைப்பேசியதை சோதனையிட்ட வேளை அதில் காற்பந்து சூதாட்டத்தின் விண்ணப்பம் மற்றும் பந்தையத்தை குறித்த உரையாடல்கள் காணப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ரவீந்தர் சிங் சர்பன் சிங் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அம்மூவரில் ஒருவர் நாளை வரையில் நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் இருவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் ரவீந்தர் சிங் கூறினார்.
மேலும், பந்தய சட்டம் 1953 -இன் 6 (3) பிரிவின் கீழ் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ரவீந்தர் சிங் தகவல் அளித்தார்.