கார் விபத்துக்குள்ளாகியதை தொடர்ந்து மூவர் கைது செய்யப்பட்டனர்

மராங், ஜுன் 27-

மூன்று நபர்கள் பயணித்த ஹோண்டா சிட்டி ரக கார் ஒன்று விபத்துக்குள்ளாகியதை தொடர்ந்து, அக்காரை அந்நபர்கள் திருடியிருப்பதாகவும் நீண்டக்காலமாக போலீசாரால் தேடப்பட்டு வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் திரெங்கானு, கம்பன் அலோர் துமானிற்கு அருகே ஜாலான் குவாலா தெரெங்கானு-குவாந்தன், 23 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் ஹோண்டா சிட்டி ரக கார் ஒன்று மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக மாராங், மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் முகமது ரஸ்மான் செடபா தெரிவித்தார்.

ஹோண்டா சிட்டி காரில் பயணித்த 27 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அம்மூவருக்கும் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்ட வேளை மற்றொரு காரில் பயணித்த ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பியதாக முகமது ரஸ்மான் கூறினார்.

சந்தேகிக்கும் அம்மூவர் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்ட வேளை, மேல் நடவடிக்கைகளுக்காக அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக முகமது ரஸ்மான் பதிலளித்தார்.

WATCH OUR LATEST NEWS