புத்ரஜயா , ஜுன் 28-
2023 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவை பெற்றவர்களில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 27 பேருக்கு அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் மேற்கல்வி பயில்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த மொத்த எண்ணிக்கையில் 83 ஆயிரத்து 667 மாணவர்களுக்கு அரசாங்க பல்லைக்கழகங்களில் பயில வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
43 ஆயிரத்து 531 மாணவர்களுக்கு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் 26 ஆயிரத்து 474 மாணவர்களுக்கு Kolej Komuniti கல்லூரிகளிலும், 5 ஆயிரத்து 355 மாணவர்களுக்கு பொது திறன் பயிற்சிக் கல்லூரிகளிலும் பயில்வதற்கு இடம் வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.