மகளை மீட்டெடுக்கும் வழக்கில் இந்திராகாந்தி தோல்வி

கோலாலம்பூர் ஜுன் 28-

தனது முன்னாள் கணவர் கே. பத்மநாபன் என்ற முஹம்மது ரிதுவான் அப்துல்லா-வை கைது செய்து, அவரிடம் உள்ள தனது மகள் பிரசனா Diksa-வை மீட்டெடுக்கும் முயற்சியில் முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு தனித்து வாழும் தாயாரான M. இந்திராகாந்தி தொடுத்த வழக்கில் இன்று தோல்விக் கண்டார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தனது மகளை கடத்திச் சென்ற தனது முன்னாள் கணவர் பத்மநாபனை ஈப்போ உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப கைது செய்து மகளை மீட்பதில் தோல்வி கண்டு விட்டதாக கூறி, முன்னாள் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீத் படோர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையான இந்திராகாந்தி இந்த சிவில் வழக்கை தொடுத்து இருந்தார்.
இந்த வழக்கில் நம்பக்கூடிய தன்மைகளை உள்ளடக்கிய விவகாரங்களை நிரூபிப்பதில் இந்திராகாந்தி தவறிவிட்டார். எனவே இந்திராகாந்தியின் இந்த வழக்கு மனுவை தள்ளுபடி செய்வதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்ற ஆணையர் ராஜா அஹ்மத் மொஹ்சானுதீன் ஷா ராஜா மொஹ்ஸான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

பத்மநாபனை கண்டு பிடிக்க உயர்நீதிமன்ற உத்தவை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்த முன்னாள் ஐஜிபிஅப்துல் ஹமீத் படோர்மற்றும் போலீஸ் உயர் அதிகாரிஆம் சீவ் செங் ஆகியோர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியங்களை தாம் நம்புவதாக நீதித்துறை ஆணையர் கூறினார்.

ஆனால், தனது மகளை கண்டு பிடிப்பதில் அரசு அலுவலகத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளது என்றும் / ஓர் அரச ஊழியர் சட்டப்படி செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து ஒரு ஐஜிபி தவறிவிட்டார் என்றும் / இந்திராகாந்தி முன்வைத்த வாதத்தை நீதிமன்றத்தினால் ஏற்க இயலாது. காரணம், அப்படி நடக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று நீதித்துறை ஆணையர் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS